Udayanithistalin | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; பாடல் வெளியீடு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி திமுக இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் எழுதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் என்ற தலைப்பில் பாடல் எழுதியுள்ளார். இந்தப் பாடலின் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பாடலை வெளியிட, திமுக இளைஞரணி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.