Thadi Balaji | TVK | Vijay | "விஜய்க்கு என்ன பன்றதுனு தெரியல அவர் கூட யாருமே இல்ல"
தவெக தலைவர் விஜயை சந்தித்தால் அதிமுக உடன் கூட்டணி வைக்க வலியுறுத்துவேன் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நெல்லையில் தவெக ஆதரவாளரும் நடிகருமான தாடி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் விவகாரத்திற்குப் பிறகு விஜய் தனித்து விடப்பட்டுள்ளார் எனக் கூறினார். 2ம் கட்ட தலைவர்களாக விசுவாசிகளை நியமித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று இருக்காது என்றும் அவர் கூறினார்.