அமைச்சர் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் திடீர் மின்தடையால் பரபரப்பு

Update: 2025-05-19 04:21 GMT

குடியாத்தம் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் திமுக இளைஞரணி சார்பாக மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அமைச்சர் பேசியபோது, அப்பகுதியில் பெய்த மழையால் திடீரென மின்தடை ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவி.செழியன், குற்றம் சாட்டப்பட்ட துணைவேந்தருக்கு ஆளுநர் விருந்து வைத்து அழகு பார்ப்பதாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்