Sidharamaiah | DK Shivakumar | சித்தராமையாவுக்கு நாட்டுக்கோழி அடித்து விருந்து வைத்த DKS
கர்நாடகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மீண்டும் காலை சிற்றுண்டியின்போது சந்தித்து பேசினர். அப்போது இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் பரிமாறப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் பதவியில் டி.கே. சிவகுமார் அமர வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், கடந்த வாரம் இருவரும் சித்தராமையா இல்லத்தில் சந்தித்து பேசினர். அதில், சுமுக உடன்பாடு எட்டாத நிலையில், மீண்டும் சிவகுமார் வீட்டில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.