Delhi Car Blast | Murasoli | டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் - கேள்விகளால் லாக் செய்த முரசொலி

Update: 2025-11-13 08:56 GMT

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு,

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையில், இரட்டை இஞ்­சின் ஆட்சி நடக்­கும் டெல்­லி­யில் குண்டு வெடித்து 13 பேர் இறந்துள்ளனர்...டெல்லி என்­றால் ஏதோ மூலையில் அல்ல... செங்கோட்­டைக்கு அரு­கில் குண்டு வெடித்­துள்­ளது.... ஆளும் தலை சரி­யாக இல்லை என்­ப­தைத்­தானே இது காட்­டு­கி­றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்­ப­வத்­துக்கு முன்­னால் உள்­துறை அமைச்­சர் என்ன செய்து கொண்டு இருந்­தார்?... பாதுகாப்­பில் கோட்டை விட்­டது யார் என்­ப­து அனை­வர்க்­கும் தெரியும்... பொறுப்­பான அவர்கள் பொறுப்­பேற்க வேண்டாமா? என்றும் முரசொலி நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்