Sai Dheena | கொடிகளோடு வீதியில் இறங்கிய நடிகர் சாய் தீனா - நடிகர் சாய் தீனா
“தொடக்க கல்வியிலேயே போதை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்“
மதுக்கடைகளை திறக்கும் அரசு, மது மறுவாழ்வு மையங்களையும் திறந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டும் என நடிகர் சாய் தீனா தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில், தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகர் சாய் தீனா, தொடக்க கல்வியிலேயே போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.