Pongal Parisu 2026 | பொங்கல் பரிசு பணம் - அடுத்த வாரம்..

Update: 2025-12-24 05:11 GMT

பொங்கல் பரிசு ரொக்கப்பணம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கப்பணம் வழங்குவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடுவார் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட, ரொக்கப்பணம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரொக்க பணமாக எவ்வளவு வழங்கலாம் என்பது குறித்து நிதித்துறையிடம் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அடுத்த வாரம் இதுதொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்