முருக பக்தர்கள் மாநாடு...வடபழனி கோயிலில் இருந்து நயினார் நாகேந்திரன் பேட்டி
திமுக தோல்வி பயத்தில் இருப்பதால், முருக பக்தர்கள் மாநாடு குறித்து விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் வரும் 22-ஆம் தேதி, முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர், 15ம் தேதியில் இருந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். அப்போது திமுக தோல்வி பயத்தில் இருப்பதால், முருக பக்தர் மாநாட்டை விமர்சிப்பதாக அவர் தெரிவித்தார்.