Kovilpatti | Railwaystation|அதிமுக vs மதிமுக vs பாஜக - கோவில்பட்டி ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு
கோவில்பட்டி வந்த வந்தே பாரத் ரயிலுக்கு அதிமுக, மதிமுக, பாஜக என மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் வரவேற்பு அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது நடைமுறைக்கு வந்தது. ரயிலை வரவேற்க, அதிமுக, மதிமுக, பாஜக என 3 கட்சியை சேர்ந்தவர்களும் ஒரே நேரத்தில் வந்த நிலையில், தாங்கள் தான் அதற்கு காரணம் என போட்டி போட்டு கோஷம் எழுப்பியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.