Karur Stampede | L murugan | ``கரூர் சம்பவத்தின் விசாரணை அறிக்கை’’ - L முருகன் சொன்ன கருத்து
Karur Stampede | L murugan | ``கரூர் சம்பவத்தின் விசாரணை அறிக்கை’’ - L முருகன் சொன்ன கருத்து
தமிழக ஆளுநர் திமுகவின் ஊழலுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதால் அவரை எதிரியாக தமிழக அரசு சித்தரித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.. மேலும் சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது போன்றவை கருத்து சுதந்திரத்தை முடக்கிய எமர்ஜென்சி காலத்தை நினைவு படுத்துவதாகவும், கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளி வரும் முன் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.