Karnataka | சித்தராமையா விட்ட வார்த்தை - டி.கே.சிவகுமார் எடுத்த முடிவால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு
ஐந்து ஆண்டுகள் நானே முதலமைச்சராக தொடர்வேன் எனக் கூறிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் அதிகார பகிர்வு ஒப்பந்தம்படி, நாடாளுமன்ற கூட்டுத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சரை மாற்றுவது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும், வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி கர்நாடகா மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லி செல்ல இருப்பதாகவும், அன்றைய தினம் அவர் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.