"சட்டத்தின் துணையோடு பொய் வழக்கை எதிர்கொள்வேன்" - முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் லஞ்ச ஓழிப்பு துறையினர் 14மணி நேரம் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன்கள் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 14 மணி நேரம் கழித்து நிறைவு பெற்றது. இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை நிறைவடைந்த பின், செய்தியாளர்களை சந்தித்த சேவூர் ராமச்சந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணையோடும், சட்டத்தின் துணையோடும் இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.