“நல்லக்கண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்“ - முத்தரசன்
நல்லக்கண்ணு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின் செய்தியாளார்களை சந்தித்த அவர், “உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் நம்பிக்கையோடு இருப்பதாகவும்“ கூறியுள்ளார்.