"வீடியோஷூட் நடத்துறீங்களா?கடுமையாக விமர்சித்த ஈபிஎஸ்

Update: 2025-03-17 03:41 GMT

மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை என்றும் ஈபிஎஸ் கூறியுள்ளார். "ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுவதாக விமர்சித்துள்ள ஈபிஎஸ், பட்ஜெட் ஹிட்டாவது என்பது அறிவிப்பதில் இல்லை - செயல்படுத்துவதில் என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்