DMK | "நேருவை அடித்தால் திமுகவை அழித்துவிடலாம் என்ற நோக்கத்தோடு" - அமைச்சர் நேரு குற்றச்சாட்டு
நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், தன்னை அடித்தால் திருச்சியில் திமுகவை அழித்து விடலாம் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு எண்ணுவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் உறையூரில் நடைபெற்ற வாக்குசாவடி முகவர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப் போவதும் இல்லை என்றார்.