TVK | Chennai | DMK | பேனர் வைப்பதில் தகராறு - திமுக, தவெக இடையே மோதல்... சென்னையில் பரபரப்பு
சென்னை மயிலாப்பூரில் திமுக - தவெக நிர்வாகிகள் இடையே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகிக்கு வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மோதலில், 27 வயது தவெக நிர்வாகியை திமுக நிர்வாகி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்ணைச் சுற்றியுள்ள எலும்பு உடைந்ததாகவும், குணமாக 6 மாதமாகும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.