Deputy CM Udhayanidhi Stalin | "என்னைக்குமே கை நம்மை விட்டு போகாது" - உதயநிதி சூசகம்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் என்றைக்கும் விலகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் இல்லத் திருமண விழாவில், கலந்து கொண்ட அவர், மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிமையாக கிடைத்துள்ளதாக விமர்சித்தார்.