CM Stalin | MK Stalin Twitte | தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கை - CM போட்ட திடீர் ட்வீட்

Update: 2025-08-16 05:47 GMT

உழைப்பவர்களுக்கு துணைநிற்போம்- முதல்வர் ஸ்டாலின்

உழைக்கும் மக்களுக்கு என்றும் துணைநிற்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், அதன் சங்க நிர்வாகிகள் பியூலா ஜான் செல்வராஜ், ஜெயசங்கர், புருசோத்தமன் உள்ளிட்டோர்

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்ட முதலமைச்சர், அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்ததாகவும், அதையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம் என்றும் உறுதியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்