மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்துக்கு ஆறரை லட்சம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.
கோவையில் தனியார் கல்லூரி அரங்கில் பாஜக தொழில்துறை வல்லுனர் பிரிவு சார்பில், தொழில்துறையினருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதின் நபின், மத்தியில் கடந்த 2004 முதல் 2013 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி வழங்கப்பட்டதாகவும், அதுவே மோடி பிரதமரான பிறகு ஆறரை லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அரசை அகற்ற வேண்டுமென நிதின் நபின் ஆவேசமாக பேசினார்.