"நேஷனல் பெர்மிட் என்கிற பெயரில் மத்திய அரசு வரி வசூல்.." - அமைச்சர் சிவசங்கர்
ஆம்னி பேருந்துகளுக்கு நேஷனல் பெர்மிட் என்கிற பெயரில் மத்திய அரசு வரி வசூலிப்பதை விட்டுத் தர முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை முகப்பேர் பணிமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நேஷனல் பர்மிட் என்கிற பெயரில், அனைத்து வரி வசூல் பணத்தையும் எடுத்து செல்லும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.