TVK Aadhav Arjuna | ஆதவ் அர்ஜுனா வழக்கில் இன்று தீர்ப்பு

Update: 2025-11-21 04:44 GMT

எக்ஸ் தளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டதாக, பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய ஆதவ் அர்ஜூனாவின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. குறிப்பிட்ட எக்ஸ் தள பதிவில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், ஆரம்ப கட்ட விசாரணை நடத்தாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்று காவல்துறை தரப்பில் வாதிப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்