பாரில் தகராறு - பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 3 பேர் கைது

Update: 2025-11-16 02:52 GMT

திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாறை அருகே பாரில் தகராறு செய்த பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட பாஜக செயலாளரான விஜயகுமாருக்கு, மேட்டுப்பாறை பகுதியில் சொந்தமாக டாஸ்மாக் பார் உள்ளது. இதனை சிவகங்கையை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் விஜயகுமாருக்கும் அழகர்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவரின் ஆதரவாளர்களும் பாரில் வைத்தே கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த புகாரில் பாஜக மாவட்ட செயலாளர் விஜயகுமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்