பூதலூர் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், சிதம்பரம் ரயில் நிலையத்தில் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்லும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.