சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்தார். எந்த அடிப்படையில் கர்நாடகாவில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது எனவும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.