Anbil Mahesh | DMK | Dharmendra Pradhan | தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி
புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டின் வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைந்த மதிப்புக்கு உட்படுத்துவதால், அதனை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதில் அளித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் என கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.