அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - மேடையிலேயே அடித்து சொன்ன ஈபிஎஸ்

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது திமுகவுக்கு எரிச்சலாக உள்ளதாக குற்றம்சாட்டினார். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அதிமுகவையும் , தன்னையும் கடுமையாக விமர்சித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com