காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2025) | 9 AM Headlines | Thanthi TV

Update: 2025-08-27 03:56 GMT
  • நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கணபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன...
  • சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது...
  • விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்...முக்கிய மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது...
  • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது...நல்ல வருவாய் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்...
  • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்...விநாயகர் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர பிரார்த்திப்பதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார் ...
  • விநாயகர் சிலைகளை கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்...மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது...
  • ​வி​நாயகர் சதுர்த்தி விடு​முறை மற்றும் முகூர்த்த தினங்களால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.....சொகுசு பேருந்​துகளில் படுக்கை​யில் பயணிக்க 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்....
  • இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த 50 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது...தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு...
  • இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்...வரி விதிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பேசிய போது எச்சரித்ததாகவும், வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்...
  • அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் சீனாவுக்கு 200 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க நேரிடும்...அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்...
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது...அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது...
  • இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் இரண்டு போர்க்கப்பல்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன...ஐ.என்.எஸ். உதயகிரி, ஐ.என்.எஸ். ஹிமகிரியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்...
  • மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
  • தனி விமானம் மூலம் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...
Tags:    

மேலும் செய்திகள்