காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2025) | 11AM Headlines | Thanthi TV
- தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும்...வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...
- ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்...கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய நிலையில், திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...
- கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனை போலீசார் தேடி வருகின்றனர்...தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், லட்சுமி மேனனை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது...
- நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கணபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன...அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....
- விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது...
- விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது...
- மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...
- ஒடிசாவில் பெய்த கனமழையால் சுவர்ணரேகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...
- நடிகர் விஷாலின் 'மகுடம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...