Uttarpradesh | சிக்கனால் சிக்கல்.. பொண்ணு வீட்டுக்கும் மாப்ள வீட்டுக்கும் சண்ட - ரணகளமான கல்யாண வீடு
உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் சிக்கன் பிரச்னையில் திருமண வீடு கலவர வீடாக மாறியது. மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் குறைவாகவும், மணமகள் வீட்டாருக்கு அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.