பிளாஸ்டிக் டிரம் வாங்க இனி ஆதார் கட்டாயம் - ஒற்றை சம்பவத்தால் மாறிய நிலை
உத்தரப்பிரதேசத்தில் கள்ளக்காதல் கொலையில், 15 துண்டுகளாக வெட்டிய உடலை மறைக்க, நீல நிற பிளாஸ்டிக் டிரம் பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிளாஸ்டிக் டிரம் வாங்க வருவோரிடம் ஆதார் அட்டை கேட்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீரட்டில் நடந்த கொலையில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் பிளாஸ்டிக் டிரம் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி டிரம் வாங்க வருவோரிடம் வீட்டு முகவரி, ஆதார் அட்டை மற்றும் எதற்காக டிரம் வாங்குகிறீர்கள் போன்ற விவரத்தை கேட்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டிரம் விற்பனையில் பாதிப்பு ஏற்படுவதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.