தாயை கொன்ற தந்தையை காட்டிக்கொடுத்த மகளின் ஓவியம் - ஷாக்கில் மக்கள்.. அதிர்ந்த போலீசார்
உத்தரபிரதேசத்தில் த*கொலை என முடிவு செய்த வழக்கில், கணவனே, மனைவியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி பகுதியில் வசித்து வந்தவர் சோனாலி. கடந் சில நாட்களுக்கு முன் இவர் த*கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் கணவன் சந்திப் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய சோனாலியின் மகள், தனது தந்தைதான் தாயை கல்லால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் கயிற்றில் கட்டி தொங்கவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தாய் கொலை குறித்த ஓவியம் ஒன்றை வரைந்திருந்த மகள் , அதனை பத்திரிகையாளர்களிடம் காட்சிபடுத்தினார்.வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சோனாலியின் தந்தை தெரிவித்துள்ளார்