உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடியே 56 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக, உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகாகும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.