பொது சிவில் சட்டத்தில் பதிந்த முதல் லிவ்-இன் ஜோடி..

Update: 2025-02-08 10:58 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இனி லிவ்-இன் உறவில் இருப்பவர்களும், குறிப்பாக மாற்று மத ஜோடியினரும் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சட்டம் அமலுக்கு வந்த ஒரு வாரத்தில், 6 ஜோடிகள் விண்ணப்பித்த நிலையில், 1 ஜோடி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, மற்ற 5 ஜோடிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. பதிவு செய்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்த போதிலும், அதற்கு மாறாக, மாற்று மத ஜோடிகளின் விவரங்கள் தங்களிடம் உள்ளன என அம்மாநில பஜ்ரங் தள் அமைப்பு நிர்வாகி விகாஸ் வர்மா தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்