உத்தர பிரதேச மாநிலம் பதாயுனில் நகை வாங்குவது போல நடித்து, 3 பவுன் செயினுடன் தப்பியவரை போலீசார் தேடிவருகின்றனர். பதாயுன் பகுதியில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர் போல வந்த ஒருவர், பல்வேறு டிசைன்களில் நகையை கேட்டு பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென மூன்று பவுன் தங்க செயினை எடுத்துக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்ததால், கடை உரிமையாளர் அதிர்ந்துபோனார்.