அரபு நாட்டில் மறு பேச்சுக்கே இடமின்றி தூக்கிலிடப்பட்ட இந்திய பெண் - பேரதிர்ச்சியில் இந்தியா
உத்தரப் பிரதேச மாநிலம் பண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 2022ல் அபுதாபி சென்ற ஷாஜாதி கான் கைக்குழந்தையை கவனித்துக் கொள்ள பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த ஆண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட அந்த 4 மாத குழந்தை இறந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஷாஜாதி கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது... குழந்தைக்கு பிரேத பரிசோதனை கூட செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... ஷாஜாதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி அவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 15ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டதை நீதிமன்றத்திற்கு தெரிவித்தது