கேரளாவில் அடுத்தடுத்து அதிர்வுகள்.. பாடகர் வேடனுக்கு அடுத்து சுரேஷ் கோபி..
புலிப்பல் சர்ச்சை - சுரேஷ் கோபியிடம் வனத்துறை விசாரணை
நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி புலிப் பற்கள் வைத்திருப்பதாக எழுந்த புகாரில் வனத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சுரேஷ் கோபி புலிப் பற்கள் வைத்து சங்கிலி அணிந்திருப்பதாக இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளரான முகமது ஹாஷிம் வனத்துறையில் புகார் அளித்திருந்தார். இது, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது என சுட்டிக்காட்டியுள்ள வனத்துறை, வருகிற 21ஆம் தேதிக்குள் புகார்தாரர் ஆதாரங்களை சமரிப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற வழக்கில், பிரபல ராப் பாடகர் வேடன் கைது செய்யப்பட்டபோது, சுரேஷ் கோபி வசம் புலிப் பல் இருந்ததாக தகவல் பரவியது.