விவாகரத்துக்கு இனி இதையும் ஆதாரமாக காட்டலாம் - சுப்ரீம்கோர்ட் முக்கிய தீர்ப்பு
மணவாழ்வு சார்ந்த வழக்குகளில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள்"
மணவாழ்வு சார்ந்த வழக்குகளில் வாழ்க்கை துணையின் தொலைபேசி உரையாடலின் ரகசிய பதிவு சாட்சியயாக ஏற்றுக் கொள்ளக்கூடியது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. முன்னதாக மணவாழ்வு சார்ந்த வழக்குகளில் வாழ்க்கை துணையின் தொலைபேசி உரையாடலின் ரகசிய பதிவு அந்தரங்க உரிமையை பாதிப்பதாக கூறி அதை சாட்சியாக கொள்ளக்கூடாது என பஞ்சாப் ஹரியாணா உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையில், அந்த தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இது தொடர்பான மேல்முறையீடு மனுவை விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.