Honeymoon Murder Update | நாட்டையே உலுக்கிய ஹனிமூன் படுகொலை - வெளியானது கடைசி நிமிட புதிய வீடியோ
மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்றபோது ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவியே கூலிப்படை ஏவி கொன்ற சம்பவத்தில், புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட சோனம் உள்ளிட்டோர் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில், கொல்லப்படுவதற்கு முன்பாக ராஜா ரகுவன்ஷி தனது மனைவியுடன் ட்ரெக்கிங் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட தாவ் எனப்படும் ஆயுதத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த ஆயுதத்தைக் கொண்டு ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தவர்களில் ஒருவரான விஷால் முதலில் தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் அந்த ஆயுதத்தால் ராஜா ரகுவன்ஷியை அடித்து கொன்றதாகவும் தெரியவந்துள்ளது.