பாகனின் பேச்சை கேட்காமல் சேட்டை செய்த யானை - பீதியடைந்த மக்கள்

Update: 2025-08-08 15:32 GMT

கேரள மாநிலம் திருச்சூரில் யானை மிரண்டு சாலையின் குறுக்கே நின்றதால் பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். கேச்சேரி பகுதி வழியாக சென்ற கெங்கா பிரசாத் என்ற யானை, திடீரென மிரண்டு, பாகனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட மறுத்தது. தொடர்ந்து அங்கிருக்கும் சாலையில் சுற்றி திரிந்த நிலையில், அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டு அச்சமடைந்தனர். பின்னர் அரை மணி நேரம் கழித்து யானை சகஜ நிலைக்கு திரும்பியதும், போக்குவரத்து சீரானது 

Tags:    

மேலும் செய்திகள்