நாட்டையே உலுக்கிய தர்மஸ்தலா விவகாரம் - கண்ணீருடன் கதறும் சின்னையாவின் மனைவி
தனது கணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தர்மஸ்தலா வழக்கில் கைதான சின்னையாவின் மனைவி மல்லிகா கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் ஆற்றங்கரை ஓரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாக சின்னையா என்பவர் அளித்த புகார் நாட்டையே உலுக்கியது.
இந்த விவகாரத்தில் பொய் புகார் அளித்ததாக சின்னையாவை அண்மையில் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதான சின்னையா, 17 ஆண்டுகளுக்கு முன் உதகையைச் சேர்ந்த மல்லிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, கடந்த 11 ஆண்டுகளாக சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கர்நாடகாவிற்கு சென்ற சின்னையாவை, திடீரென போலீசார் கைது செய்துள்ளதாக மல்லிகா குமுறியுள்ளார்.