காட்டுத் தீயாய் பரவிய தாக்குதல் வீடியோ - பின் நடந்த பரபரப்பு சம்பவங்கள் - மோகன் பாபு விளக்கம்

Update: 2024-12-14 12:24 GMT

நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது இளைய மகன் மஞ்சு மனோஜிற்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை மோகன் பாபு தாக்கியதையடுத்து, அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மோகன்பாபுவின் முன் ஜாமின் மனு ரத்தானதாகவும், அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், இவற்றை மறுத்த மோகன்பாபு, தனது ஜாமின் மனு நிராகரிக்கப்படவில்லை என்றும், வீட்டில் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்