தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி-சி61 திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். புவி கண்காணிப்புசெயல்பாடுகளுக்காக EOS-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில், 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். ஆய்வுக்குப் பின் விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.