Tata Salt | "அப்பா நாம இவ்ளோ நாள் யூஸ் பண்ணது டாடா சால்ட் இல்லையா?" - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
உ.பி.யில் டாடா நிறுவனம் பெயரில் போலி உப்பு விற்றது கண்டுபிடிப்பு
உத்தரப்பிரதேசத்தில், டாடா நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த உப்பு பறிமுதல் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள சில கடைகளில், உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரண்டு கடைகளில், டாடா நிறுவனத்தின் பெயரில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உப்பை போலியாக பேக்கிங் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 935 பாக்கெட் போலி உப்பு பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.