நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

Update: 2025-07-29 03:41 GMT

கட்டு கட்டாக பணம் சிக்கிய வழக்கில் நீதிபதிகள் விசாரணைக்குழு முன் ஆஜராகிவிட்டு வழக்கு தொடர்வதா? என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகள் விசாரணைக் குழு அமைத்ததை ஏன் எதிர்த்து வழக்கு தொடரவில்லை? என்றும், தற்போதைய நிலையில் வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் விசாரணைக் குழு அறிக்கைகளின் உண்மைத் தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கும் நிலையில் அவற்றில் என்ன குறைபாடு உள்ளது? என்றும், நீதிபதிக்கு எதிராக அளிக்கும் புகார் மீது நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னவாகும் என்ற சரமாரி கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்