``Rafale போர் விமானங்களின் முக்கிய பாகத்தை பராமரிக்க போகும் தென்னிந்தியா’’
ஐதராபாத்தில் ரபேல் விமான எஞ்சின் பராமரிப்பு நிறுவனம்
ஐதராபாத்தில் ரபேல் போர் விமானங்களுக்கான M88 எஞ்சின்களை பராமரிப்பதற்காக புது நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது
இந்தியா பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கியிருக்கிறது. ரபேல் மரைன் போர் விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்தியா விமானப்படையின் அடுத்த போர் விமான ஒப்பந்தங்களை பெறவும் ரபேல் விமானங்களை தயாரிக்கும் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து டசால்ட் ஏவியேஷன் பங்குகள் விலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ரபேல் போர் விமானங்களுக்கான எஞ்சின்களை வழங்கும் பிரான்ஸின் சஃப்ரான் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஐதராபாத்தில், ரபேல் போர் விமானங்களுக்கான M88 எஞ்சின்களை பராமரிப்பதற்காக புதிய நிறுவனத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரஃபேல் போர் ஜெட் எஞ்சின்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.