லோகா திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.101 கோடி வசூல்
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம், வெளியான ஒரு வாரத்தில் 101 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில், டோமினிக் அருண் இயக்கத்தில், டொவினோ தாமஸ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள், பாராட்டுகள் குவிந்துள்ள நிலையில், இதுவரை 101 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.