கள்ளகாதலனுக்காக ஆன்லைனில் விஷம் வாங்கி கணவனை கொன்ற கொடூர மனைவி.. உ.பியில் அதிர்ச்சி
இருமுறை விஷம் கொடுத்து கணவரை கொன்ற மனைவி கைது
உத்தரபிரதேச மாநிலத்தில், கணவனுக்கு இருமுறை விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஃபிரோசாபாத் பகுதியில் வசிக்கும் சாஷி என்ற பெண், ஆன்லைனில் விஷம் வாங்கி தயிரில் கலந்து கணவர் சுனிலுக்கு கொடுத்துள்ளார். சிகிச்சைக்கு பின் கணவர் தப்பியதால், மீண்டும் அவருக்கு விஷம் கலந்த கிச்சடி கொடுத்துள்ளார். கிச்சடியை சாப்பிட்ட கணவர் சுனில் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக தெரிகிறது. சந்தேகத்தின் பேரில் சுனிலின் தாயார் அளித்த புகாரில், சாஷி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த அவரது ஆண் நண்பரான யதவேந்திராவையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் திருமணம் தாண்டிய உறவு காரணமாகவே சுனிலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.