ஐ.ஐ.எம் மாணவர் விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை - மாணவர் கைது
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை, சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ஆகிய சம்பவங்கள் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது, ஐ.ஐ.எம் கல்வி வளாக மாணவர் விடுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கவுன்சிலிங் அமர்வுக்காக தான் மாணவர் விடுதிக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு ஒரு பானத்தை குடித்தபிறகு மயங்கியதாகவும் கூறியுள்ளார். சுயநினைவு திரும்பியபிறகு தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்ததாகவும், இதை வெளியே கூறினால், மோசமான விளைவுகள் ஏற்படும் என சம்பந்தப்பட்ட மாணவர் மிரட்டியதாகவும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.