பாலம் இடிந்து விபத்து...'மகனை காப்பாற்றுங்கள்'... கதறிய தாய்
குஜராத்தில் பழமையான கம்பீராஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கிய தனது மகனை காப்பாற்றும்படி பெண் ஒருவர் கதறிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் மஹிசாகர் ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்ததில், பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். அப்போது அவ்வழியாக காரில் தனது மகன் உள்ளிட்டோருடன் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காரின் பின்புறம் அமர்ந்த அந்தப் பெண், கண்ணாடியை உடைத்து தப்பிய நிலையில் அவரது குடும்பத்தினர் நீரில் சிக்கினர். அப்போது, தனது மகன் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், யாராவது உதவி செய்யுமாறும் அப்பெண் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது...