``சயீப் உண்மையிலே குத்தப்பட்டாரா? நடிக்கிறாரா'' - எழுப்பப்பட்ட சந்தேகம்

Update: 2025-01-24 05:03 GMT

மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த 16-ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகானின் குடியிருப்புக்குள் புகுந்த கொள்ளையன், அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றான். இதில் காயமடைந்த சைஃப் அலிகான், 5 நாள் சிகிச்சைக்குக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த காட்சியை பார்க்கும்போது, அவர் உண்மையிலேயே கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று சந்தேகமாக உள்ளது என அமைச்சர் நிதீஷ் ராணே கூறியுள்ளார். அவருடைய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்